CCE
Asst மென்பொருளானது தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் முப்பருவக் கல்வி முறை
மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை போன்ற திட்டங்களின் காரணமாக 1 முதல்
8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையைக் குறைத்திடும்
நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
பதிவேடுகள்
பராமரிக்கப்பட்டு ஆய்வுகளின் போது பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்பதால், அந்தந்த
நிலையில் அச்சுப்படி எடுத்து பதிவேடுகளாக வைத்துக்கொள்ளும் வசதியோடு உருவாக்கப்பட்டுள்ளது.
கணிப்பொறி
இயக்குதலிலும், தமிழ் தட்டச்சு முறையிலும் நிபுணத்துவம் ஏதும் தேவையின்றி சிறிய அளவில்
பயிற்சி பெற்றவர்கள் கூட எளிதாக இயக்கிடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
CCE
பதிவேடுகள் மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவை என்ற அடிப்படையில் DTERT நிறுவனம்
வெளியிட்டுள்ளள வழிகாட்டுதல்களின்படி பதிவேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதியாக
பதிவேடுகளை நேரடியாக பிரிண்டருக்கு அனுப்பி பிரிண்ட் எடுக்காமல், ஆசிரியர்கள் பரவலாகப்
பயன்படுத்தி வரும் MS Excel மென்பொருளுக்கு
பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்கள் பதிவேடுகளில் கூடுதல்
விவரங்கள் சேர்க்க விரும்பினாலோ அல்லது திருத்தங்கள் செய்ய விரும்பினாலோ செய்து கொள்ள
முடியும். பதிவேடுகளை பிரிண்ட் எடுக்கமாலேயே சக ஆசிரியர்களுடனும், ஆய்வு அலுவலர்களுடனும்
பகிர்ந்து கொள்ள முடியும்.
CCE
தொடர்பான அனைத்து பதிவேடுகள் (பாட ஆசிரியர் பதிவேடு, வகுப்பாசிரியர் பதிவேடு) மட்டுமின்றி
ஒவ்வொரு பருவ முடிவிலும் நடைபெறும் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு தொகுக்கப்படு, அனைவருக்கும்
கல்வி இயக்கத்தினரால் கோரப்படும் SLF III போன்ற
அறிக்கைகளையும் இம் மென்பொருள் வழங்குகிறது.
CCE முற்றிலும்
கணிணிமயக்கப்பட்டது என்ற சூழலில் ஒரு கணிப்பொறியைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும்,
அனைத்து வகுப்புக்களுக்கும் தேவையான பதிவேடுகளை எளிதில் பெற இயலும்.
CCE Asst மென்பொருள்
இயங்கும் முறை
இம்மென்பொருளை பயன்படுத்த
தொடங்கும் முன்பு மாணவ மாணவியர் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும், இம்மென்பொருள் மாணவர்கள்
குறித்த விவரங்களை தனியாகவும், அவர்கள் படிக்கும் வகுப்புக்கள் குறித்த விவரங்களைத்
தனியாகவும் பராமரிக்கும்,
இதன் மூலம் கல்வியாண்டு முடிவில் மேல் வகுப்புக்களுக்கு
செல்லும் போது பெரிய அளவில் முயற்சிகள் ஏதுமின்றி எளிமையாக வகுப்பு மாற்றங்களை செய்துவிட
முடியும்,
இம் மென்பொருள் கல்வியாண்டுகள், பருவங்கள் குறித்த
விவரங்களையும் பராமரிக்க உதவுவதால், பல ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட குறிப்பிட்ட மாணவனின்
கல்வி நிலை முன்னேற்றங்களை கல்வியாண்டு, பருவம் வாரியாக பார்வையிடவும் அச்செடுக்கவும்
முடியும். ஆதாவது இந்த ஆண்டில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர் எட்டாம் வகுப்பு முடிக்கும்
போது அவருடைய எட்டு ஆண்டுகளுக்கான Report ஐக் கூட பெற இயலும்.
பாடத்தலைப்புக்களை
ஆசிரியர் கூடுதலாக சேர்க்கவும், திருத்தம் செய்யவும், நீக்கம் செய்யவும் முடியும்.
ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பாடத்திற்கு FA(a) செயல்பாடுகளை முன்கூட்டியே தீர்மானித்து இம்மென்பொருளில்
பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு
பதிவேற்றம் செய்து கொண்ட பின்பு, அந்தச் செயல்பாடுகளை அடிப்படிடையாகக் கொண்டு, குறிப்பிட்ட
பாடத்திற்கு மாணவருக்கு எந்த FA(a) செயல்பாடுகளை
ஒதுக்கீடு செய்து தரப்போகிறோம் என்பதை இம்மென்பொருளில் உள்ள FA(a) செயல்பாடுகளை ஒதுக்கீடு
செய்தல் என்ற திரையின் மூலமாக செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த
தாளை உடனடியாக பதிவேட்டில் சேர்த்து விடும் போது, தற்போது நடத்தும் பாடம் வரையிலான
CCE FA(a) பதிவேடு புதுபிக்கப்பட்டுவிம். மேலும் எந்த மாணவருக்கு எந்த செயல்பாடு என்பது
வரை முன்கூட்டியே தீர்மானித்து விட்டு வகுப்பறைக்குச் செல்லும் போது ஆசிரியர் பணி எளிமையாக
அமையும், அத்தோடு வகுப்பறைச் செயல்பாடுகள் மாணவர், ஆசிரியர் என இரு தரப்பிற்கும் திருப்திகரமாக
அமையும். FA(a) செயல்பாடுகளுக்கு உரிய மதிப்பெண்களை தாளில் பதிவு செய்து பின்னர், நேரம்
கிடைக்கும் போது கணிணியில் பதிவு செய்து விடலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டு,
மதிப்பிடப்பட்ட FA(a) செயல்பாடுகளை தொகுத்து
உரிய முறையில் FA(a) செயல்பாடுகளுக்கு இறுதி
தரம் வழங்குவதை மென்பொருள் செய்துவிடும்.
இதே
முறையில் FA(b) செயல்பாடுகளை தீர்மானித்தல்(அ) வரையறுத்தல் (அ) தயாரித்தல் , பகிர்தல்,
மதிப்பிடல் போன்ற வேலைகளை ஆசிரியர் எளிமையாக மென்பொருளை பயன்படுத்தி மிக எளிமையாக செய்து
விட முடியும்.
FA(a),
FA(b) செயல்பாடுகளை ஒவ்வொரு பாடத்திற்கும் ஓரேயொரு முறை தயாரித்து மென்பொருளில் பதிவேற்றிவிட்டால்
போதும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் செயல்பாடுகளை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தல்,
மதிப்பிடல் போன்ற வேலைகளை மட்டும் செய்து பதிவேடுகளை தயாரித்து விடலாம். இதனால் ஆசிரியர்கள்
பதிவேடுகளை எழுதுவதிலும், புதுப்பிப்பதிலும் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுவதைத்
தவிர்த்து வகுப்பறை செயல்பாடுகளில் கவனம் செலுத்த இயலும்.
கல்வி
இணைச் செயல்பாடுகள் மதிப்பீடும் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டள்ளது. DTERT நிறுவனம்
ஒவ்வொரு தலைப்பிற்கும் மதிப்பிட வேண்டிய துணைக் கூறுகளைக் வகுத்துள்ளது.
மென்பொருளானது
ஒவ்வொரு துணைக் கூறுக்கும் அளிக்கப்படும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு அத்தலைப்பிற்கான
மாணவனின் மதிப்பெண்களையும், தரத்தையும் தீர்மானித்து விடும். எனவே ஆசிரியர் மென்பொருளால்
பட்டியலிடப்படும் துணைக்கூறுகளை (பண்புகளை) யும், மாணவனின் பெயரையும் பார்த்து அந்தப்
பண்பிற்கு அந்த மாணவனிற்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம் எனத் தீர்மானித்து மதிப்பெண்களை
அளித்தால் போதும். இவ்வாறே அனைத்து பண்புகளுக்குமான மதிப்பெண்களை அளித்து விட்டால்
இறுதி அறிக்கையை மென்பொருள் தானே தயாரித்து விடும்.
தொகுத்தறிவுத்
தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய தனித்திரை உள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட
FA(a). FA(b). SA மதிப்பெண்களைக் கொண்டு பருவ இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும்.
CCE
பதிவேடுகள் மட்டுமின்றி அவ்வப்போது அதிகாரிகள், அலுவலர்களால் கோரப்படும் புள்ளி விவரங்களையும்
Query Builder என்ற வசதி மூலம் எடுத்துக் கொள்ள
முடியும்.
இம்மென்பொருளின்
சோதனைப் பதிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment